சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை


சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைசி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அசோக் குமார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

மேலும், வன்கொடுமை சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோன் என மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் அசோக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெறு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி அசோக் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தொகையை செலுத்தாதபட்சத்த்ல் கூடுதலாக 10 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.


Next Story