மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி


மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி
x
தினத்தந்தி 27 Aug 2023 10:47 AM IST (Updated: 27 Aug 2023 10:50 AM IST)
t-max-icont-min-icon

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பட்டன் மாவட்டம் பில்சி கிராமத்தை சேர்ந்தவர் தஜீந்திர சிங் (வயது 43). இவருடைய மனைவி தேவி (வயது 40) . இந்த தம்பதிக்கு 4 மகன்/மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, தஜீந்திர சிங்கின் மகனுக்கு 19 வயது பெண்ணுடன் கடந்த வாரம் திருமணமானது. இந்த தம்பதி தஜீந்திர சிங், மனைவி தேவியுடன் வசித்து வந்தனர்.

அதேவேளை, தஜீந்திர சிங் தன் மனைவியை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். அவருக்கு பாலியல் ரீதியில் தொல்லையும் கொடுத்துள்ளார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான தஜீந்திர சிங் தன் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். மேலும், மருமகளை தன் ஆசைக்கு இணங்க வைக்கும்படி தன் மனைவியிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மனைவி தேவி மறுப்பு தெரிவிக்கவே அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு தஜீந்திர சிங் தன் வீட்டிற்கு மதுபோதையில் வந்துள்ளார். பின்னர், தன் மனைவியை தாக்கிய தஜீந்திர சிங், மருமகளை தன் ஆசைக்கு இணங்க வைக்கும்படி தன் மனைவி தேவியிடம் மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தேவி இரவில் தூங்கிக்கொண்டிருந்த தன் கணவன் தஜீந்திர சிங்கை கழுத்தறுத்து கொலை செய்தார். பின் தன் கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக தேவி நாடகமாடியுள்ளார். ஆனால், விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் கணவனை கொன்றதை தேவி ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து தேவியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story