சபரிமலையில் வரும் 12-ந்தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது


சபரிமலையில்  வரும் 12-ந்தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
x

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story