இலங்கை, மொரிஷியசில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் நாளை அறிமுகம்


இலங்கை, மொரிஷியசில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் நாளை அறிமுகம்
x

இந்தியாவின் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது.

புதுடெல்லி,

யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யு.பி.ஐ. பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம். இந்தியாவின் யு.பி.ஐ. சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும், மொரிஷியசும் இணைந்துள்ளது. இதன்படி இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யு.பி.ஐ.) பரிவர்த்தனை சேவைகள் இலங்கை மற்றும் மொரிஷியஸில் நாளை நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

காணொலி காட்சியின் வாயிலாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.


Next Story