இலங்கை ராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை


இலங்கை ராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை
x

கோப்புப்படம்

இலங்கை ராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி பிரபாத் புலத்வத்தே. இவர் திரிபோலி படைப்பிரிவு என அழைக்கப்படும் இலங்கை ராணுவத்தின் ரகசிய படைப்பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்.

கடந்த 2008-ம் ஆண்டு இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் கீத் நொயார் கடத்தி துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் பிரபாத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பத்திரிகையாளரை துன்புறுத்திய விவகாரத்தில் மனித உரிமைகளை மீறியாக கூறி இலங்கை ராணுவ அதிகாரி பிரபாத் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

1 More update

Next Story