வடமாநில தொழிலாளர் விவகாரம்: உத்தரபிரதேச பா.ஜனதா பிரமுகர் முன்ஜாமீன் மனு தாக்கல் - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை


வடமாநில தொழிலாளர் விவகாரம்: உத்தரபிரதேச பா.ஜனதா பிரமுகர் முன்ஜாமீன் மனு தாக்கல் - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச பா.ஜனதா பிரமுகரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த்குமார் உம்ராவ். டெல்லி கோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். உத்தரபிரதேச பா.ஜனதா செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.

இவர், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்ச்செய்தி பரப்பியதாக தூத்துக்குடி மத்திய போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தனக்கு முன்ஜாமீன் அளிக்குமாறு அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய செய்தி நிறுவனங்களில் வெளியான செய்திகளை டுவிட்டரில் வெளியிட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இம்மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story