உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்; பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்


உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்; பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்
x

உத்தரபிரதேசத்தில் மாணவர் ஒருவர் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது.

இங்கு பயிலும் குரிந்தர் சிங் என்ற மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அதுதொடர்பாக மாணவர் குரிந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம்சிங் வர்மா திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், நாட்டு துப்பாக்கியால் பள்ளி முதல்வர் மீது இருமுறை சுட்டார்.

அந்த காட்சி, பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. காயமடைந்த முதல்வர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாகிவிட்ட மாணவரை தேடிவருகின்றனர்.

1 More update

Next Story