குஜராத் படகு விபத்து: குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் - உள்துறை அமைச்சர் தகவல்


குஜராத் படகு விபத்து: குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் - உள்துறை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2024 5:44 PM GMT (Updated: 18 Jan 2024 5:57 PM GMT)

வதேதராவில் படகு கவிழ்ந்த சம்வத்தில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஹார்ணி ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 12 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட கலெக்டர் ஏ.பி.கோர் தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, "இந்த படகு விபத்து சம்பவத்தில் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த உடனே, கலெக்டர், போலீஸ் கமிஷனர், நகராட்சி கமிஷனர் மற்றும் 60க்கும் மேற்பட்ட NDRF மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த சம்பவத்தில் 20 பேர் மீட்கப்பட்டனர், 16 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க, முதல்-மந்திரி விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 304, 308 மற்றும் 114 பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

இதனிடையே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

இதேபோல உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story