திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2023 6:16 AM GMT (Updated: 3 Nov 2023 9:56 AM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திருப்பதி,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்தமாதம் 23-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வருகிற 10ம் தேதி ரூ.300 தரிசன டிக்கெட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story