கேரளாவில் துணை ஜனாதிபதி; அதிக சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


கேரளாவில் துணை ஜனாதிபதி; அதிக சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
x

கேரளாவில் துணை ஜனாதிபதி பயணித்த கண்ணூரில் அதிக சக்தி வாய்ந்த 8 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கண்ணூர்,

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பள்ளி படிப்பின்போது ஆசிரியராக இருந்தவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த நிலையில், கண்ணூரில் கன்னாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கல் பகுதியில் சக்தி வாய்ந்த 8 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவை சாக்கு பை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு கால்வாய் பாலத்தின் கீழே மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ பகுதிக்கு இன்றுவிரைந்தனர். அதன்பின் அந்த வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு, கடந்த 13-ந்தேதி கண்ணூர் மாவட்டத்தில் வயத்தூர் பகுதியில் மாவில குஞ்சுமோன் என்பவர் வீடு மீது அதிகாலையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. இதில், அவரது வீடு பலத்த சேதமடைந்தது.


Next Story