நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனம் - கறிக்கோழிகளை தூக்கிச்சென்ற மக்கள்


நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனம் - கறிக்கோழிகளை தூக்கிச்சென்ற மக்கள்
x

கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்தது.

லக்னோ,

டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிமூட்டம், வெளிச்சமின்மை காரணமாக சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்தது. பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில், கூண்டில் வைக்கப்பட்டிருந்த கறிக்கோழிகள் சாலையில் விழுந்தன.

அப்போது, அந்த சாலையில் பயணம் செய்த சிலர் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த கறிக்கோழிகளை தூக்கிச்சென்றனர். சிலர் சாக்குமூட்டைகளுடன் வந்து கறிக்கோழிகளை தூக்கிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story