அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி; கர்நாடக அரசு உத்தரவு


அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி; கர்நாடக அரசு உத்தரவு
x

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா ெகாண்டாட அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தென்இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் ெபாது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்து சமூக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் கொண்டாட...

இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிைகயை ெகாண்டாட அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பள்ளிகளில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூைஜ செய்து வழிபடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு

சமீபத்தில் கர்நாடக அரசு பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, அரசு பள்ளி-கல்லூரிகளில் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய கூடாது என்று தீர்ப்பு கூறியது. இந்த சூழ்நிலையில் அரசு பள்ளிகளில் விநாயகர் சிைல ைவத்து விநாயகர் சதுர்த்தி பண்டிைகயை கொண்டாட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை

அதாவது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர், அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்துள்ளது, அதே போல் தங்கள் பண்டிகையின்போது பள்ளிகளில் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

கர்நாடக அரசின் உத்தரவை தொடர்ந்து மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் முதல் பி.யூ. கல்லூரிகள் வரை விநாயகர் சதுர்த்தி பண்டிைக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story