வடசென்னையில் தொழில் பயிற்சி வர்த்தக மையம்: மத்திய மந்திரியிடம் தி.மு.க. எம்.பி. கோரிக்கை


வடசென்னையில் தொழில் பயிற்சி வர்த்தக மையம்: மத்திய மந்திரியிடம் தி.மு.க. எம்.பி. கோரிக்கை
x

கோப்புப்படம்

வடசென்னையில் தொழில் பயிற்சி வர்த்தக மையம் அமைக்க வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் தி.மு.க. எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. கிரிராஜன் டெல்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவொற்றியூர், எண்ணூர், மணலி, கொளத்தூர், கொரட்டூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப்பகுதிகள் பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் சிறு-குறு தொழில்நிறுவனங்கள் அமைந்த போட்டி நிறைந்த தொழில்துறை மண்டலம் ஆகும். இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே திறமையான மனிதவளத்தை மேம்படுத்த தொழில்பயிற்சி மற்றும் வர்த்தக மையம் அவசியத்தேவையாக உள்ளது. ரெட்டேரி மற்றும் மாதவரத்துக்கு இடையே இதை அமைப்பது பொருத்தமாக இருக்கும். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வெகுதொலைவில் உள்ளது. எனவே வடசென்னையில் பன்னோக்கு தொழில்பயிற்சி மற்றும் வர்த்தக மையத்தை பொழுதுபோக்கு பூங்காவுடன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story