2024 தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு வேட்பாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம் - மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா தலைவர்


2024 தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு வேட்பாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம் - மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா தலைவர்
x

2024 தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு வேட்பாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க விரும்புவதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.

வேட்பாளர்கள் இல்லாத நிலை

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா - உத்தவ் தாக்கரே சிவசேனா நேரடியாக மோதுகின்றன. இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுதேர்தல்களில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்க விரும்புவதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிசின் சிறந்த ஆட்சி காரணமாக 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் 200-க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளும், 45 மக்களவை தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

18 மணி நேரம் உழைப்பு

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் பெரிய தலைவர்களின் நெருக்கமானவர்கள் தான் வளர முடியும். பா.ஜனதாவில் கடும் உழைப்பு தான் தகுதி. கடுமையாக உழைப்பவரை பா.ஜனதாவில் வளரவிடாமல் யாரும் தடுக்க முடியாது. எனக்கும் எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. ஆனால் நான் மாநில தலைவராகி இருக்கிறேன்.

கடந்த 2½ ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்தவர் மந்திராலயா கூட வரமாட்டார். ஆனால் ஷிண்டேவும், பட்னாவிசும் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைக்கிறார்கள். 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story