உள்கட்டமைப்பு வளர்ச்சியே பொருளாதாரத்தின் உந்து சக்தியாகும்- பிரதமர் மோடி உரை
இந்தஆண்டு பட்ஜெட், நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
டெல்லி,
பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசாங்கம் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதள உரையில் இதுகுறித்து கூறிய அவர், இந்தஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என்றார்.
"பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசு கருதுவதாகவும், இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும்" என்று மோடி கூறினார்.
இப்போது இந்த வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, டாப் கியரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய அவர், சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.