"டெல்லியில் ஊழலுக்கு முடிவு; பஞ்சாபில் செயல்முறை தொடக்கம்" - இமாச்சலில் கெஜ்ரிவால் உரை


டெல்லியில் ஊழலுக்கு முடிவு; பஞ்சாபில் செயல்முறை தொடக்கம் - இமாச்சலில் கெஜ்ரிவால் உரை
x

இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

குலு,

இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் குலுவில் சாலைப் பேரணி நடத்தினர்.

அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அண்ணா ஹசாரே இயக்கத்தில் தொடங்கிய எங்கள் பயணம், பின்னர் கட்சியை உருவாக்கினோம். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம்.

முதலில், டெல்லியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தோம். பின்னர் பஞ்சாபில் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல்முறையைத் தொடங்கினோம். எந்த ஒரு முதலமைச்சரும் தன் அமைச்சரை சிறைக்கு அனுப்பியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தனது சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார்.

அவருக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர் அதை கம்பளத்தின் கீழ் மறைத்திருக்கலாம் அல்லது அமைச்சரிடம் தனது பங்கைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவரை சிறைக்கு அனுப்பினார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story