நான் ஓர் இந்து என பெருமையுடன் கூறும் ஒரு நபர் நமக்கு தேவை: அசாம் முதல்-மந்திரி கர்நாடகாவில் பேச்சு


நான் ஓர் இந்து என பெருமையுடன் கூறும் ஒரு நபர் நமக்கு தேவை: அசாம் முதல்-மந்திரி கர்நாடகாவில் பேச்சு
x

நான் ஓர் இந்து என பெருமையுடன் கூறும் ஒரு நபர் நமக்கு இன்று தேவையாக உள்ளது என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கர்நாடகாவில் பேசியுள்ளார்.



பெலகாவி,


கர்நாடகாவின் பெலகாவி நகரில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, நாட்டில் நாங்கள் முஸ்லிம், கிறிஸ்துவர் என பெருமையுடன் கூறி கொள்ளும் நிறைய பேர் உள்ளனர்.

அதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் ஓர் இந்து என பெருமையுடன் கூறும் ஒரு நபர் நமக்கு தேவையாக உள்ளது. அது போன்றதொரு நபர் இந்தியாவுக்கு இன்று தேவையாக உள்ளார்.

அவுரங்கசீப்பின் ஆட்சி காலத்தில் சனாதன கலாசாரம் முடிவுக்கு வருவதற்கான முயற்சி நடந்தது. பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அப்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜ் பிறந்து, அவுரங்கசீப்பை எதிர்கொள்ளும் வகையில் தன்னை போன்ற ஒரு மகனை பிறக்க செய்ய பாரதா மாதாவால் முடியும் என வெளிப்படுத்தினார்.

அவுரங்கசீப்பால் நமது சனாதன கலாசாரங்களை அழிக்க முடியவில்லை. இன்று நாட்டில் சனாதனம் உள்ளது. இந்துவும் உள்ளது. தொடர்ந்து இருக்கும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியுள்ளார்.


Next Story