நிதிஷ் குமாரை அவ்வளவு எளிதாக பதவியேற்க விடமாட்டோம்: ஆர்.ஜே.டி. அதிரடி


நிதிஷ் குமாரை அவ்வளவு எளிதாக பதவியேற்க விடமாட்டோம்: ஆர்.ஜே.டி. அதிரடி
x

நாங்கள் சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக இருப்பதால், ஆட்சி அமைக்க எங்களுக்குத்தான் முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியேற உள்ளதாகவும், பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்-மந்திரி ஆவதற்கான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமாரின் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், நிதிஷ் குமாரை அவ்வளவு எளிதில் பதவியேற்க விடமாட்டோம் என கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக இருப்பதால், ஆட்சி அமைக்க எங்களுக்குத்தான் முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார். எங்களுக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் கூறினார்.

தங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நிதிஷ் குமார் ராஜினாமா செய்தபின் யார், யார் ஆதரவு என்பதை கூறுவதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.


Next Story