"பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்" - மாயாவதி அறிவிப்பு


பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் - மாயாவதி அறிவிப்பு
x

பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

எதிர்க்கட்சி கூட்டணியில் சேராதது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதவாது:-

சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ளது; எனவே பாஜக மற்றும் காங். கூட்டணிகளிடமிருந்து பகுஜன் சமாஜ் விலகியே இருக்கும்.

எல்லோருமே ஒன்றுதான். அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இதுதான் உண்மை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளின் கூட்டணியில் நாங்கள் சேரவில்லை.

தேர்தல்களை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகளோடு கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story