பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் உதவிகள் - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்


பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் உதவிகள் - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
x

பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான உதவிகளை பிரதமர் மோடி இன்று வழங்க உள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களில் ஒருவர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்காக பி.எம். கேர்ஸ் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் தங்குமிட வசதி அளித்தல், கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பலன்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக வழங்க உள்ளார். அப்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் பாஸ்புக் மற்றும் சுகாதார அட்டை ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story