பிரதமர் மோடியை சந்திக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு


பிரதமர் மோடியை சந்திக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு
x

கோப்புப்படம்

இந்த மாதம் டெல்லி செல்ல இருக்கிறேன் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்திருப்பதாக மாநில அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அந்த கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருப்பதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனது கட்சி எம்.பி.க்கள் சிலருடன் இந்த மாதம் டெல்லி செல்ல இருக்கிறேன். மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்குமாறு கேட்க பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். வருகிற 18, 19 அல்லது 20-ந் தேதிகளில் ஏதேனும் ஒருநாள் நேரம் ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளேன்.

100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு மத்திய திட்டங்களின் கீழ் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை. மத்திய அரசின் நிதி நிலுவைத்தொகையை மாநிலம் இழந்து வருகிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


Next Story