மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு


மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
x

மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு அதிக அளவு நிலுவை வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகைக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 5 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில், கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று கவர்னர் ஆனந்த போசை சந்தித்து இது குறித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் மத்திய அரசிடம் பேசுவதாக கவர்னர் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கட்சி அறிவித்து உள்ளது. இந்த பிரச்சினையில் திருப்தி அளிக்கும் பதிலை 2 வாரங்களுக்குள் கவர்னர் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறினார்.


Next Story