மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பேரணியில் வன்முறை - ஹவுராவை தொடர்ந்து ஹூக்ளியில் பரபரப்பு


மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பேரணியில் வன்முறை - ஹவுராவை தொடர்ந்து ஹூக்ளியில் பரபரப்பு
x

ஹூக்ளி பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் அண்மையில் ராம நவமி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அதனைத் தொடர்ந்து ஹவுரா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி பகுதியில் இன்று பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் போது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இது குறித்து பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், பேரணி நடத்தியவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், போலிசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஹூக்ளி பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



Next Story