மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி


மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி
x

கோப்புப்படம்

மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி விடுத்தார்.

புதுடெல்லி,

மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஸ்மிரிதி இரானி, பா.ஜனதா தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மணிப்பூர் பிரச்சினை குறித்த விவாதத்தை தொடங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

உள்துறைக்கு பொறுப்பான மந்திரி என்ற முறையில், சில உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார்.

மறைக்க பார்க்கிறது

ஆனால், இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், எந்த உண்மையும் வெளிவர அனுமதிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்ததுதான். மணிப்பூர் பிரச்சினை, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

வாருங்கள், விவாதியுங்கள் என்று உள்துறை மந்திரி அழைப்பு விடுத்த பிறகும், என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? விவாதிக்க பயந்து ஓடுவது ஏன்? என்று அவர் கூறினார்.


Next Story