3 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் எப்போது? - இன்று தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்


3 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் எப்போது? - இன்று தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 18 Jan 2023 10:15 AM IST (Updated: 18 Jan 2023 10:22 AM IST)
t-max-icont-min-icon

3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

புதுடெல்லி,

2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருக்கின்றன.இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் வருகிற மார்ச் மாதம் முடிவடைய இருப்பதால் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த மாதம் இவற்றிற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மதியம் 2.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேகாலயாவில் மார்ச் 12-ல், திரிபுராவில் மார்ச் 22-ல், நாகாலாந்தில் 12-ல் சட்டசபை பதவி காலம் நிறைவடைகிறது.


Next Story