நடிகை ரம்யாவுக்கு திருமணம் எப்போது?; அவரே அளித்த பதில்


நடிகை ரம்யாவுக்கு திருமணம் எப்போது?; அவரே அளித்த பதில்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:17:28+05:30)

நடிகை ரம்யாவுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ரம்யா தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். 39 வயது ஆகியும் ரம்யாவுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யாவிடம், ஒரு மாணவர் 'உங்கள் திருமணம் எப்போது?' என்று கேட்டார். அதற்கு ரம்யா பதில் அளிக்கும்போது, அந்த மாணவரை பார்த்து 'நீங்கள் சிங்கிளா?. வாழ்க்கையில் பணம், கல்வி முக்கியமானது. உங்களுக்கு நல்ல துணை கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். எனக்கான வாழ்க்கை துணையை இதுவரை நான் சந்திக்கவில்லை. ஒருவரை கண்டுபிடித்தால் எனது திருமணம் நடக்கும்' என்றார்.


Next Story