அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன்? பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி


அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன்? பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
x
தினத்தந்தி 23 Aug 2022 11:23 AM GMT (Updated: 23 Aug 2022 11:59 AM GMT)

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா 2-வது அலை உச்சம் பெற்று இருந்த சமயத்தில், "ஆக்சிஜன் கிடைக்காமலோ அல்லது சிகிச்சை கிடைகாமலோ அல்ல..மாறாக அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். காசை பிடுங்கும் முறைதான் அல்லோபதி" என கடுமையாக விமர்சித்து பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சித்து பேசியிருந்தார். பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அபோது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு, அலோபதி மருத்துவ முறையை ராம்தேவ் விமர்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியது.மேலும்,ன் அலோபதி மருத்துவ முறைகளை விட ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ முறைதான் சிறந்தது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா ? மருத்துவர்கள், மருத்துவ கட்டமைப்பை ராம்தேவ் விமர்சிப்பது என்பது பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக் கூடியதாகும். எனவே, பாபா ராம்தேவ் இதர மருத்துவ முறைகள் குறித்து அவதூறு பரப்பக் கூடாது" என்று கூறியது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசும் பாபா ராம்தேவும் பதிலளிக்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Next Story