மற்றவர்களை அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் காட்டம்


மற்றவர்களை அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்:  மத்திய அரசு மீது கெஜ்ரிவால் காட்டம்
x

மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: -"நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மத்திய அரசு ஏன் மோதிக்கொண்டே இருக்கிறது? அனைவருடனும் மோதிக்கொண்டிந்தால் நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியாது. நீங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள், மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள். மற்றவர்களின் வேலைகளில் தலையீடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story