'நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் ஏன் இருக்க வேண்டும்?' - பிருந்தா காரத் கேள்வி


நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் ஏன் இருக்க வேண்டும்? - பிருந்தா காரத் கேள்வி
x

திறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் இருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

எதிர்கட்சிகளின் அறிவிப்புக்கு தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ.) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், எதிர்கட்சிகளின் இந்த செயல் அவமரியாதையானது என்றும், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் பண்புகளை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிக்கையை நான் படித்தேன், ஆனால் அதில் முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற விழாவில் ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் ஏன் இருக்கிறார்? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பதில் சொல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகளை சுமத்துவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று நினைக்கிறேன். இதை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story