கேரளா: அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு


கேரளா: அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
x

இன்று முதல் 9 ஆம் தேதி வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் சூறாவளி சுழற்சி காரணமாக இன்று முதல் 9ஆம் தேதி வரை கேரளாவின் தொலைதூர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கேரளாவின் பல இடங்களில் இயல்பான அளவும், ஒரு சில மாவட்டங்களில் இயல்பு அளவைவிட அதிகமாகவும் மழை பெய்ந்துள்ளது.

ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாகவும், திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டாவில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகப்படியான மழை பெய்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் கேரளாவில் மழை குறைவாக பதிவான ஒரே மாவட்டம் வயநாடாகும்.

அதிகப்படியான மழைப்பொழிவு என்பது பருவத்திற்கான இயல்பான மழை அளவில் இருந்து 20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை அதிகமாகும். மிகவும் அதிகப்படியான மழைப்பொழிவு என்பது இயல்பான மழையைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும்.


Next Story