இரைதேடி கர்நாடக கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் விரட்டியடிப்பு


இரைதேடி கர்நாடக கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் விரட்டியடிப்பு
x

தமிழக வனப்பகுதியில் இருந்து இரைதேடி கர்நாடகத்திற்கு உட்பட்ட கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகளை வனத்துறையினர் மீண்டு தமிழக வனப்பகுதிக்கே விரட்டியடித்தனர்.

பெங்களூரு:-

காட்டுயானைகள்

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே ஹிண்டுவனகனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோலூரு, வனகனஹள்ளி, மெனசிகனஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. நேற்று

முன்தினம் இரவு தமிழ்நாட்டு எல்லையில் இருந்து ஹுச்சனஹள்ளி வழியாக வனகனஹள்ளி கிராமத்திற்குள் 5 காட்டுயானைகள் புகுந்தன.

பின்னர் அவைகள் மெனசிகனஹள்ளி, சோலூரு ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், காபித்தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும், காபிச்செடிகளையும் நாசம் செய்தன. மேலும் அங்குள்ள ஏரியில் குளித்தன.

விரட்டியடிப்பு

பின்னர் அவைகள் அங்குள்ள ஒரு காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்தன. இதுபற்றி அறிந்த விவசாயிகள் உடனடியாக ஆனேக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலையில் அங்கு வந்து தீப்பந்தம் காண்பித்தும், பட்டாசுகள் வெடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், 'இந்த காட்டுயானைகள் இரை தேடி இங்கு வந்துள்ளன. இதில் 3 ஆண் யானைகள், ஒரு பெண் யானை மற்றும் ஒரு குட்டியானை உள்ளன. அவைகளை தமிழ்நாடு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டோம்' என்றனர்.


Next Story