நாட்டில் நிலவும் வெறுப்பு, மதவெறிக்கு எதிராக போராடுவோம் - ராகுல்காந்தி
நாட்டில் நிலவும் வெறுப்பு, மதவெறிக்கு எதிராக போராடுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி நேற்று பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு முன் ராகுல்காந்தி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
காங்கிரசின் 85-வது கூட்டம் என்பது நமது பாரம்பரியத்தால் பகிரப்பட்ட ஒரு பார்வை. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் நமது கலாசாரம் நமது உண்மையான வலிமை. தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள், இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதே நமது நோக்கம். நாட்டில் நிலவி வரும் மத வெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் தொடருந்து போராடுவோம்.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும்' என்றார்.