ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்


ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
x

File image

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு அங்கு நடைபெறுகிறது.

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயலாகும். இது ஜம்மு-காஷ்மீருக்கு அவமானம்.

இந்தியாவுக்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும், வேலைவாய்ப்புகளை கொண்டுவரும், பெண்களை வலிமையாக்கும், அநீதியான உலகத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவரும், ஜம்மு- காஷ்மீரை செழிப்பாக மாற்றும். எனவே, நீங்கள் அனைவரும் வெளியே வந்து உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story