2030 இளைஞர் ஒலிம்பிக், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம்: பிரதமர் மோடி


2030 இளைஞர் ஒலிம்பிக், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம்:  பிரதமர் மோடி
x

இந்தியாவின் ஆசிய பாரா விளையாட்டு போட்டி வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். அவர், இந்தியாவின் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுடன் இன்று உரையாடினார்.

அரசின் அணுகுமுறை தடகள வீரர்களை மையப்படுத்தி உள்ளது என்று அப்போது அவர் கூறினார். இந்தியா, விளையாட்டு கலாசாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என கூறிய பிரதமர் மோடி, முன்னேறி செல்வதற்கான சுய நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர், 2030 இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story