பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: தாய், 3 குழந்தைகள் உயிரிழப்பு


பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: தாய்,  3 குழந்தைகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 May 2024 1:51 PM IST (Updated: 1 May 2024 2:01 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தாய், 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் பொவாகலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 7 மணியளவில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 வயதுமிக்க பெண் மற்றும் அவரது குழந்தைகள் 5 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து வீட்டிற்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாய் மற்றும் அவரது 3 குழந்தைகள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விபத்து குறித்து அம்மாவட்ட மாஜிஸ்திரேட்டு துஷார் சிங்லா விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து சிலிண்டர் விபத்துக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story