பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்.. லாட்ஜில் இருந்து மீட்ட போலீசார்


பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்.. லாட்ஜில் இருந்து மீட்ட போலீசார்
x

பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தன் குடும்பத்தினருடன் பேருந்தில் வந்து இறங்கியபோது கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, நேற்று இளம்பெண் ஒருவரை இரண்டு நபர்கள் சேர்ந்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண்ணை, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வைரலாக பரவியது.

பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண், பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும், குடும்பத்தினருடன் பேருந்தில் வந்து இறங்கியபோது கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட இளம்பெண், குணா பகுதியில் உள்ள லாட்ஜில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். அவரை கடத்திச் சென்றவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Next Story