லிவ் இன் காதலியை கொலை செய்த நபர்


லிவ் இன் காதலியை கொலை செய்த நபர்
x

லிவ் இன் காதலியை தலையணை வைத்து கொலை செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் சாண்டகுரூஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஷஹாபுதீன் ஹாசி (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர் மரியம் பேபி (வயது 33) என்ற பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார்.

இருவரும் சாண்டகுரூஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், தனது லிவ் இன் காதலி மரியம் பேபியை நேற்று காதலின் ஷஹாபுதீன் கொலை செய்துள்ளார். தலையணையால் அமுக்கி மரியம் பேபியை ஷஹாபுதீன் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஷஹாபுதீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story