கேரளாவில் நாளை ஆற்றுக்கால் பொங்கல் விழா: குவியும் பக்தர்கள்


கேரளாவில் நாளை ஆற்றுக்கால் பொங்கல் விழா: குவியும் பக்தர்கள்
x

சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். அதன் பின் அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.

இந்நிலையில், ஆற்றுக்கால் பொங்கலை கொண்டாடுவதற்காக கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பெண்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை தேவாலயங்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story