ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து பெண்கள் அரை நிர்வாண போராட்டம் அசாமில் பரபரப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தொடங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பெண்கள் திடீரென தங்கள் உடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் மொத்த உடைகளையும் கழற்றி நிர்வாணமாக நின்றனர். உடனே அங்கு நின்றிருந்த பெண் போலீசார் அந்த 2 பெண்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பிற பெண்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, அங்கு வீடு கட்டியிருந்தவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அங்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.






