மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: இன்று வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது - அமித் ஷா பெருமிதம்


மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா: இன்று வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது - அமித் ஷா பெருமிதம்
x

Image Courtacy: SANSADTV

தினத்தந்தி 21 Sep 2023 6:35 PM GMT (Updated: 21 Sep 2023 6:37 PM GMT)

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் வரலாற்றில் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் இன்று மகளிர் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த சூழலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேறியது. மாநிலங்களவையில் இருந்த அனைத்து எம்.பி.க்களும் (215) மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேற்ற நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதநிலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் வரலாற்றில் மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "விருப்பம் உள்ள இடத்தில் ஒரு வழி இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், சமமான ஆட்சிப் பாதையில் இன்று வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உலகெங்கிலும் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தின் சக்திவாய்ந்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ளார். மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்த்துக்கள்" என்று அதில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்


Next Story