ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்- அமித்ஷா


ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்- அமித்ஷா
x

நரேந்திர மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புவதாக அமித்ஷா தெரிவித்தார்.

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் நிறைவு நாளான இன்று பாராமுல்லா மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அமித்ஷா, நரேந்திர மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்த பேரணியில் அவர் மேலும் பேசியதாவது:-

நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். பாரமுல்லா மக்களுடன் பேசுவோம். காஷ்மீர் மக்களுடன் பேசுவோம்.

நரேந்திர மோடி அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க விரும்புகிறது. அதனால் ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் சொர்க்கமாக இருக்கும். நாங்கள் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். ஜம்மு-காஷ்மீரை நாட்டிலேயே மிகவும் அமைதியான இடமாக மாற்ற விரும்புகிறோம்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Next Story