'காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம்' - நிதின் கட்காரி


காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம் - நிதின் கட்காரி
x

கோப்புப்படம்

'காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிக்கலாம்’ என நிதின் கட்காரி கூறி உள்ளார்.

நாக்பூர்,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், சிறந்த அரசியல் எதிர்காலம் கொண்ட நல்ல மனிதராக இருப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஜிச்கார் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அவரிடம், காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிப்பேன் என்று பதிலளித்தேன்' என தெரிவித்தார்.

காங்கிரசின் சித்தாந்தம் தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய கட்காரி, நல்லதோ, கெட்டதோ, ஒரே சித்தாந்தத்தில் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உங்களிடம் நேர்மறை, தன்னம்பிக்கை இருக்க வேண்டுமே தவிர ஆணவம் கூடாது என்றும் கூறினார்.

பா.ஜனதா கட்சியின் முக்கிய குழுக்களில் இருந்து நிதின் கட்காரி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை குறித்து அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story