கேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை


கேரளாவில் 6 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை
x

இன்று மற்றும் நாளை கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (ஜூலை 13) கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை (ஜூலை 14) இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரப்படி எரிமையூரில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழையும், போத்துண்டி அணை மற்றும் நிலம்பூரில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பொன்னானி மற்றும் குப்பட்டியில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.


Next Story