உத்தர பிரதேச எம்.எல்.ஏ.க்களுடன் அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் - நிராகரித்த அகிலேஷ் யாதவ்


உத்தர பிரதேச எம்.எல்.ஏ.க்களுடன் அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் - நிராகரித்த அகிலேஷ் யாதவ்
x

Image Courtesy : ANI

கடவுள் ராமர் எங்களை அழைக்கும்போது அயோத்திக்கு செல்வோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில், மாநில எம்.எல்.ஏ.க்கள் பலர் அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் அதனை நிராகரித்து விட்டார். முன்னதாக உத்தர பிரதேச சட்டசபையில், "கடவுள் ராமர் எங்களை அழைக்கும்போது நாங்கள் அயோத்திக்கு செல்வோம்" என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story