பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா அரளிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா (வயது25). இவரும் அதேப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இளம்பெண்ணுடன் மல்லிகார்ஜுனா பேசுவதில்லை.
இதுகுறித்து அவரிடம் இளம்பெண் கேட்டாலும் உரிய பதிலளிக்க வில்லை. இந்தநிலையில், இளம்பெண் மல்லிகார்ஜுனா மீது புகார் அளிக்க தீர்த்தஹள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது போலீசார் மல்லிகார்ஜுனா குடும்பத்தினரையும், இளம்பெண்ணின் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். இந்தநிலையில் மல்லிகார்ஜுனாவிடம் பேச வேண்டும் என இளம்பெண் போலீஸ் நிலையத்தில் இருந்து சென்றார். இந்தநிலையில் இளம்பெண் பத்ராவதியில் உள்ள தனியார் பள்ளி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த நியூடவுன் போலீசார் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்டு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.