உங்கள் வாக்குகள் எதிர்கால தலைமுறையை தீர்மானிக்கப் போகிறது- ராகுல்காந்தி


உங்கள் வாக்குகள் எதிர்கால தலைமுறையை தீர்மானிக்கப் போகிறது- ராகுல்காந்தி
x

உங்கள் வாக்குகள் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உங்கள் வாக்குகள் எதிர்கால தலைமுறையை தீர்மானிக்கப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு! உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தைப் பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பைத் தோற்கடித்து, ஒவ்வொரு மூலையிலும் 'அன்பின் கடை'யைத் திறக்கவும்."

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story