அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும் - ராகுல்காந்தி


அநீதிக்கு எதிராக அச்சமின்றி போராட வேண்டும் - ராகுல்காந்தி
x

நாட்டில் இழைக்கப்படும் அநீதி எதிராக இளைஞர் காங்கிரசினர் அச்சமின்றி போராட வேண்டுமென ராகுல்காந்தி தெரிவித்தார்.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேசியவதாவது:-

பாஜக, ஆர்.எஸ்.எஸ். உண்மையான பிரச்சினையில் இருந்து மக்களை திசைதிருப்புகிறது. நாட்டில் இழைக்கப்படும் அநீதி எதிராக இளைஞர் காங்கிரசினர் அச்சமின்றி போராட வேண்டும். அநீதியை பொறுத்துக்கொள்ள வேண்டாம், அநீதியை கண்டு பயப்படவேண்டாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வேலையின்மை, பணவீக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.


Next Story