ஆந்திராவின் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி


ஆந்திராவின் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி
x

Image Courtesy : @YSRCParty

தினத்தந்தி 16 March 2024 10:41 AM GMT (Updated: 16 March 2024 12:23 PM GMT)

175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

அதே சமயம், முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகள் என அனைத்து தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்தில், அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story