பெங்களூருவில் சினை பசுமாட்டை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது


பெங்களூருவில் சினை பசுமாட்டை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது
x

பெங்களூருவில் சினை பசுமாட்டை திருடி அதனை கொன்று இறைச்சியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

2 பேர் கைது

பெங்களூரு ஹெண்ணூர் போலீசார் அதிகாலையில் எச்.பி.ஆர். லே-அவுட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 4-வது ஸ்டேஜ் பகுதியில் முகப்பு விளக்கை எரிய விடாமல் ஒரு ஆட்டோ வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவை வழிமறித்தனர். உடனே ஆட்டோவில் இருந்த 3 பேர் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து போலீசார் விரட்டி சென்றார்கள்.

பின்னர் சிறிது தூரத்தில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் அந்த ஆட்டோவில் சோதனை நடத்திய போது மாட்டிறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மாட்டிறைச்சியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் ஹெண்ணூர் போலீசார் கைது செய்தாா்கள்.

சினை பசுமாடு

விசாரணையில், அவர்கள் எச்.பி.ஆர். லே-அவுட்டை சேர்ந்த சையத் பர்கத், பில்லண்ணா கார்டனை சேர்ந்த இம்ரான் பாஷா என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவார்கள். வீட்டின் அருகே ஒருவர் வளர்த்து வரும் பசுமாட்டை சையத் பர்கத் உள்பட 3 பேரும் திருடி உள்ளனர். அந்த பசு மாட்டை கொன்று, அவற்றின் இறைச்சி விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கி இருந்தனர். மேலும் கொல்லப்பட்ட பசுமாடு சினையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து மாட்டிறைச்சி, பணம், செல்போன்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் ஹெண்ணூர் போலீசார் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுதது வருகின்றனர்.

1 More update

Next Story