ஒக்கலிக சமுதாயம்: எழுத்தாளர் கே.எஸ்.பகவான் மீது வழக்குப்பதிவு


ஒக்கலிக சமுதாயம்: எழுத்தாளர் கே.எஸ்.பகவான் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

ஒக்கலிக சமுதாயம் பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதால் எழுத்தாளர் கே.எஸ்.பகவான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மைசூரு:-

மைசூரு டவுன்ஹாலில் கடந்த 13-ந்தேதி மகிஷா தசரா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரபல எழுத்தாளர் கே.எஸ்.பகவான், ஒக்கலிக சமுதாய மக்கள் பண்பாடு இல்லாதவர்கள். அவர்கள் விலங்குகள் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்து மதம், ஸ்ரீராமர், சீதை, பகவத்கீதை பற்றியும் அவர் அவதூறாக பேசி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

இதைக்கண்டித்து பா.ஜனதாவினர், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஒக்கலிக சமுதாய சங்கத்தினர் கே.எஸ்.பகவான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக ஒக்கலிக சங்க இயக்குனரான கங்காதர் என்பவர், ஒக்கலிக சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய எழுத்தாளர் கே.எஸ். பகவான் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேவராஜா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கே.எஸ்.பகவான் மீது இந்திய தண்டனை சட்டம் 153 (கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசுதல்) மற்றும் 153 ஏ (மதம், இன உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல்) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story